முட்டை – 1
கேரட் சிறியது – 1
வெள்ளரிக்காய் – 2
எலுமிச்சை பழம் – பாதி
குடைமிளகாய் சிறியது – பாதி
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி – சிறிதளவு
[பாட்டி மசாலா] மிளகு தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை :

முட்டையை நன்றாக வேகவைத்து ஓட்டை எடுத்து விட்டு பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

கேரட், கொத்தமல்லி, குடைமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதையை எடுத்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய முட்டை, கேரட், கொத்தமல்லி, குடைமிளகாயை போட்டு அதனுடன் [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கலந்த கலவையை வெள்ளிக்காயின் நடுவில் வைத்து பரிமாறவும்.

சத்தான சுவையான முட்டை வித் வெள்ளரிக்காய் சாலட் ரெடி.

இந்த சாலட்டை செய்த உடனேயே சாப்பிட வேண்டும். நேரமானால் நன்றாக இருக்காது.

Comments are closed.