பழங்கள் (பப்பாளி, ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், கொய்யாப்பழம் மற்றும் பல) – 1 கப்,
சர்க்கரை – தேவைக்கு,
சிட்ரிக் அமிலம் – 1/2 டீஸ்பூன்,
ராஸ்பெர்ரி கலர் – சிறிது,
பென்சோயேட் – 1/2 டீஸ்பூன்.

பழங்களை கழுவி சதுர துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 1 விசில் விட்டு வேக வைக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பழத்தின் விழுது அளவிற்கு சமமாக சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சி அரைத்த பழ விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்பு சிட்ரிக் அமிலம், ராஸ்பெர்ரி கலர் சேர்த்து கலந்து இறக்கவும். சோடியம் பென்சோயேட் கலந்து பாட்டிலில் போட்டு வைக்கவும்

Comments are closed.