இறால் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 15,
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது.

வறுத்து அரைக்க…
தேங்காய்த்துருவல் – 1 கப்,
இஞ்சி – 1 இன்ச் துண்டு,
பூண்டு – 2 பல்,
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 15 அல்லது காரத்திற்கேற்ப,
உப்பு – தேவைக்கு

இறாலை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு, மிளகுத்தூள் கலந்து ஊறவிடவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தனியாத்தூள், மஞ்சள் தூள் தவிர, மற்றவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து ஆறியதும் மைய அரைத்து தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, அரைத்த மசாலா கலவையை ஊற்றி எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். உப்பு, ஊறவைத்த இறாலை போட்டு வதக்கி இறால் வெந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Comments are closed.