பாசிப்பருப்பு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தோல் சீவிய இஞ்சி – அரை இன்ச் துண்டு
மல்லி – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு ஒரு கப் எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் தண்ணீரை வடியவிட்டு அதனுடன் மல்லி, மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பின் உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாகக் கிள்ளி போட்டுப் பொரித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

Comments are closed.