சோயா உருண்டைகள் – 100 கிராம்,
தயிர் – 30 கிராம்,
தந்தூரி மசாலா – 15 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப,
வெங்காயம் – 1,
குடமிளகாய் – 1,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

சோயா உருண்டைகளை 5 நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைக்கவும். பிறகு அதைப் பிழிந்து எடுத்து, தயிர், மசாலா, உப்பு ஆகியவற்றில் பாதியளவு சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். மீதி மசாலாவில் பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் எண்ணெய் சூடுபடுத்தி, சிறு தீயில் வெங்காயம், குடமிளகாய் வதக்கி, அத்துடன் ஊறிய சோயா உருண்டைகளையும் சேர்த்துப் பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

Comments are closed.