கேரட் – 50 கிராம்,
கோஸ் – 100 கிராம்,
பீன்ஸ் – 25 கிராம்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2,
குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, இஞ்சி – தலா 1 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு – தலா 25 கிராம்,
சோயா சாஸ் – சிறிது,
காய்ந்தமிளகாய் விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – சிறிது,
எண்ணெய், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், தக்காளி சாஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், குடைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, மைதா, சோள மாவு, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, சூடான எண்ணெயில் முறுவலாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து கிளறி, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, வறுத்த காய்கள், ஸ்ப்ரிங் ஆனியன் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

Comments are closed.