தேவையான பொருள்கள்:

ஆப்பிள் – 2
சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி
நெய் – 5 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு – 1க‌ப்
முந்திரிப் பருப்பு – 10
கேசரிப் கலர் – 1/2 சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை


செய்முறை:

ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து ஏலக்காய் தூள் தூவி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா தயார்.

Loading...

Comments are closed.